Beloved in Christ! We warmly welcome you to the CSI Kadamankuzhi Pastorate Church website.

Church History

Church History

"உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்ற இறைநாதர் இயேசுவின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டவர் பலர். அவர்களில் ஒருவர் பரிசுத்த தோமா அப்போஸ்தலர். இந்தியமக்கள் இறை ஒளியை பெறட்டும் என்ற உன்னத நோக்கோடு வந்து இந்தியாவில் சில திருச்சபைகளை உருவாக்கி மைலாப்பூரில் இரத்தசாட்சியாக மரித்தார். "இரத்தசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து" என்பதை அறியாமல் கொடுமை செய்து நற்செய்தி தொண்டர்களைத் தடுத்துவிடலாம் என்ற எண்ணம் தகர்க்கப்பட்டது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் தொடங்கிய மிஷனறி பணி இந்தியாவின் பல இடங்களில் பரவிக்கொண்டிருந்த காலத்தில் ஐரோப்பாவில் மார்டின் லூதர் மூலமாக சீர்திருத்த சபை உருவாகி அக்கொள்கையினை பின்பற்றியோர் இயேசுவை அறியா மக்களுக்கு அச்செய்தியினை துடிப்போடு கொண்டு செல்ல தொடங்கிய காலம் 18 -ம் நூற்றாண்டு எனக்கூறலாம். புது நாடுகளும், கண்டங்களும் கண்டு பிடிக்கப்பட்ட அந்நாட்களில் பலர் பணத்திற்காக செயல்பட்டாலும், இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க் போன்ற இடங்களில் பற்றிய எழுப்புதல் தீயினால் தொடப்பட்ட இளம் வாலிபர்கள் சிலர். தங்களை வெளிநாடுகளுக்கு மிஷினறிகளை அனுப்பும் சங்கங்களில் இணைத்து இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல தொடங்கினர். அவர்களில் ஒருவர்தான் ஜெர்மன் நாட்டை சேர்ந்த Rev. உல்லியம் தொபியாஸ் றிங்கல் தௌபே. எஸ். பி.ஸி.கே. சங்கத்தின் மிஷினறியாக இந்தியாவந்த அவர் திருவிதாங்கூரில் நிறுவும் சபைகள், 1795-ல் தொடங்கப்பட்ட லண்டன் மிஷனறி சங்கத்திற்கு உரியது என மேலதிகாரிகளுக்கு தெரிவித்தபின், திரு. வேதமாணிக்கம் (மகாராசன்) அழைப்பை ஏற்று 1806 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 -ம் நாள் மைலாடியில் தன் ஊழியத்தை தொடங்கி ஏழு திருச்சபைகளை நிறுவினார். அவர் 1816 -ல் இத்தேசத்தை விட்டு சென்ற பிற்பாடு அவருடைய இடத்திற்கு Rev. சார்லஸ் மீட் ஐயர் அவர்கள் லண்டன் மிஷனறி சங்கத்தாரால் அனுப்பப்பட்டார்கள். அவர் 1819 -ல் குளச்சலுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் கொத்தனாவிளை என்ற ஊரில் பள்ளிக்கூடம், ஆலயம் போன்றவற்றை அமைத்து, பக்கத்து கிராமங்களுக்கு திருப்பணியாளர்களை அனுப்பியும் தானே நேரில் சென்றும் நற்செய்தியினை அறிவித்துவந்தார். Rev. மீட் மற்றும் Rev. மால்ற் ஐயர் காலங்களில் 1820 -ல் “கிழக்கே கூடங்குளத்திற்கும், மேற்கே தேங்காய்பட்டணத்திற்குமிடையே அநேகசபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. ஒவ்வொரு சபையிலும் ஒரு பாடசாலை ஏற்படுத்தப்பட்டது''!

கடமாங்குழியில் கிறிஸ்தவம் - ஓர்கண்ணோட்டம்

இந்த ஊர் குறும்பனை கடற்கரையிலிருந்து 2 கி.மீ.க்குள் அமைந்து காணப்படுகிறது. மிகச் சிற்றூராக 19-ம் நூற்றாண்டில் விளங்கிய இவ்வூரிலிருந்து மக்கள் தங்கள் அன்றாட தேவைகளைச் சந்திக்க அவ்வப்போது துறைமுகப்பட்டினமான குளச்சலுக்கும், அந்த காலத்தில் உயர்நிலையிலிருந்த திங்கள்சந்தை போன்ற இடங்களுக்கும் நடைபயணமாகப் போய் வருவது வழக்கம்.

மீட் ஐயர் நெய்யூரில் தங்கி, கொத்தனாவிளையை மையமாகக் கொண்டு மிஷனறி ஊழியம் செய்து வந்த போது, கடமாங்குழியின் பக்கத்து கிராமமான வண்ணான்விளைக்கு திருப்பணியாளர்கள் அனுப்பப்பட்டார்கள். (அப்போதைய வண்ணான்விளை கிராமம் கடற்கரையில் தற்போது குறும்பனை R.C. ஆலயம் இருக்கும் இடத்தின் பக்கத்தில் அமைந்திருந்தது.) அதைக் குறித்து ஜேம்ஸ் M. வென்னிங் (மிஷனறிகள் இட்ட பெயர்) என்ற திருப்பணியாளர் 1831ல் எழுதிய தனது பணியறிக்கையில்:

"I Cannot Conclude my half yearly report, without stating that many of the heathen, who formerly shunned the hearing of the gospel, and reviled it now gladly listen and feel an increasing desire after the truth. Some have received religious tracts and read them with delight. There are several heathen at Colatchy, Panavily, Kareavilly, Vannanvilly and other places, who express their intention of embracing the true vedam."²

“என்னுடைய அரையாண்டு பணியறிக்கையை சில காரியங்களைக் கூறாமல் முடிக்க முடியாது. ஏனென்றால் முந்தைய நாட்களில் சுவிசேஷத்தை வெறுத்த மக்கள் இப்போது ஆசையாய் கேட்கிறார்கள். சிலர் மத சம்பந்தமான துண்டுப் பிரதிகளை வாசித்து மகிழ்ச்சி அடைகிறார்கள். குளச்சல், பனவிளை, காரியாவிளை, வண்ணான்விளை மற்றும் சில இடங்களில் உள்ள ஏனைய மார்க்கத்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்” என்று எழுதுகிறார்.

வண்ணான்விளையில் புரோட்டஸ்டன்ட் மிஷனறிகளின் பணி கடமாங்குழியில் வாழ்ந்த மக்களை கவர்ந்தது. ஏனென்றால் மிஷனறிகளின் அறிக்கைப்படி வண்ணான்விளையில் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின் கடமாங்குழி ஒரு கிளை சபையாக (Sub-Station) செயல்பட்டு வந்தது.

மேலும் ஆலஞ்சி பகுதியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை R.C. திருச்சபையின் மிஷனறி பணியின் மூலம் வளர்ந்து வந்தது. Rev. சார்லஸ் மீட் ஐயரின் காலத்தில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் தண்டனை பெற்ற மற்றும் அச்சபையின் கொள்கைகளைப் பிடிக்காதவரும் வண்டன் மிஷன் சபையின் அங்கமாக சேர்ந்தனர். அப்படியும் கடமாங்குழியில் சிலர் சேர்ந்தார்கள்.

அதைக் குறித்து வண்ணான்விளை மற்றும் நமது சபையின் முதல் திருப்பணியாளராக இருந்த திரு. மாசில்லாமணி (J. Hardey) தனது அறிக்கையில் 1859ல் எழுதும்போது:

"Karuttudian of Kadamankuzhi the new convert from Romanism is regular in attendance on sabbath services and diligent in reading and searching the scriptures. He has altogether left off the Romanish form of prayers and offers prayer like our other Christians. He also makes it his duty to urge his heathen and Romanist friends and neighbours to receive the truth which he has found."³

“கடமாங்குழியைச் சார்ந்த கருத்துடையானென்பவர் ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து நமது சபையில் சேர்ந்தவர். ஞாயிறு ஆராதனையில் பங்கு பெறுவதோடு, வேதத்தை வாசித்து சத்தியங்களைத் தேடுகிறார். மொத்தமாக எல்லா விதமான கத்தோலிக்க முறையிலான வழிபாடுகளையும் விட்டுவிட்டு நம்முடைய மற்ற கிறிஸ்தவர்களைப் போன்றே தொழுகை செய்கிறார். அதோடு ஏனைய மற்ற மார்க்கத்தவர்களையும், தனது கத்தோலிக்க நண்பர்களையும், தனது அயலகத்தாரையும் தான் அறிந்த சத்தியத்திற்கு நேராக நடத்துவது தனது கடமை என்று உணர்ந்து செயல்படுகிறார்.”

இலுப்புவிளாகத்தில் திருச்சபை

இவ்வூர் முகிலவிளைக்கு அருகாமையான ஒரு இடம். Rev. சார்லஸ் மீட் ஐயரின் ஆரம்ப காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சபைகளில் தேவிகோடு சபையும் ஒன்றாகும். 1831-ல் தேவிகோடு திருச்சபை மக்கள் மிடாலக்காடு கிராமம் வரை வாழ்ந்தார்கள்.

அதைக் குறித்து அத்திருச்சபையின் திருப்பணியாளர் திரு. சார்லஸ் குளோவர் (மிஷனறிகள் கொடுத்த பெயர்) 1831-ல் தனது திருச்சபையின் இடங்களை குறித்து எழுதிய அறிக்கையில்:

“The following are the names of the villages belonging to the Davyodoo Congregation: viz. Paraparavilly, Mangunnuvilly, Parapoo, Paloor, Midalakaudoo, Mucalampadoo, Kannenvilly, Pandaravilly and Potacully. The number of Christian families residing in these nine villages is twenty two.”

பின்வருபவை தேவிகோடு திருச்சபைக்குட்பட்ட கிராமங்கள் ஆகும். அவை முறையே பறப்பாறவிளை, மாங்குன்னுவிளை, பரப்பு, பாலூர், மிடாலக்காடு, முக்கலம்பாடு, கண்ணன்விளை, பண்டாரவிளை, பொட்டல்குழி ஆகியவை. இந்த ஒன்பது கிராமங்களிலும் 22 கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்தனர்.

முகிலவிளைக்கு அருகாமை ஊரான மிடாலக்காட்டிலும் மற்றும் மிடாலக்குளத்திற்கு மேற்கு பகுதியிலும் தேவிகோடு திருச்சபையின் மக்கள் வாழ்ந்தனர். ஆலயம் சற்று தொலைவில் இருந்ததால் ஆலயத்திற்கு ஒழுங்காக செல்ல இயலவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 12 முதல் 15 பேர் மட்டும் ஆராதனையில் கலந்து கொண்டனர்.

“The number that attended on Sabbath morning was from twelve to fifteen.”

ஆகவே ஆலயம் இலுப்பைவிளாகம் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தேவிகோடு சபையின் திருப்பணியாளரே இவ்வாலயத்தில் திருப்பணியாளராக பணியாற்றினர். 1858-ம் ஆண்டு தேவிகோட்டின் திருப்பணியாளராக இருந்த திரு. வேதமாணிக்கம் அவர்கள் இங்கும் திருப்பணியாற்றினார்.

கடமாங்குழி, இலுப்புவிளாகம் சபைகள்

கடமாங்குழி, வண்ணான்விளை சபையின் உபசபையாகவும் (Sub-Station), இலுப்பைவிளாகம் சபை தேவிகோட்டின் கிளை சபையாகவும் சில ஆண்டுகள் செயல்பட்டன. இவை மீட் ஐயரின் திருப்பணி மூலம் உருவாக்கப்பட்டவை என்பதால், இரு சபைகளின் ஆரம்ப காலம் ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

இவை இரண்டும் கி.பி. 1840க்கும் 1853க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியவையாக இருக்க முடியும்.

கடமாங்குழி சபையும் - இலுப்புவிளாகம் சபையும் இணைதல்

இந்த இரு சபைகளின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இரண்டு திருச்சபைக்கும் பொதுவான இடத்தில் ஆலயத்தை அமைத்தால் குற்றிதாணி, புதுகாடு வெட்டிவிளை, மிடாலக்காடு, காஞ்சான்விளை, முகிலவிளை, வரவிளை, பள்ளாத்துவிளை, நீர்வக்குழி, பிறவாவிளை முதலிய பகுதிகளில் வாழும் மக்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணம் அப்போதைய சபை மக்களுக்கும், ஊழியர்களுக்கும், மிஷனறிக்கும் காணப்பட்டது.

1854ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நெய்யூர் சேகர மிஷனறியாக பொறுப்பேற்ற Rev. பிரடரிக் பேலீஸ் ஐயர் தமது ஊழிய காலத்தில் இச்சபையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினார். விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும், பனை ஏறும் தொழிலாளர்களாகவும், விவசாயிகளாகவும் காணப்பட்ட இச்சபை மக்களால் இணைந்து செயல்பட ஆழமான அன்பு மனம் இருந்தது. ஆனால் பூமி வாங்கி ஆலயம் கட்ட பணம் இல்லை.

அப்போது இப்பிராந்தியத்தில் நிலச் சுவான்தாரர்களாக இருந்த கருக்குவிளை நாயர் குடும்பத்தை நாடினர்.

“The suit church property originally belonged to Karukkuvilai tarawad of Keezmidalam.”

கிராமத்தில் இறை ஒளியும் கல்வி ஒளியும் வருவதை விரும்பிய அக்குடும்பத்தின் தலைவர் 1864ஆம் ஆண்டு (மலையாள வருடம் 11-04-1040) ஓலைப் பிரமாணத்தின் மூலம் 1 ஏக்கர் 48 சென்ட் பரப்பளவு கொண்ட நிலத்தை ஒற்றியாக மிஷனுக்கு வழங்கினார். (பொட்டல்விளை என்ற பெயர் வழக்கில் இருந்தாலும், ஆதிநில ஆவணப்படி அண்ணஞ்சன்விளை என்ற பெயரும் இப்பூமிக்கு காணப்படுகிறது.) இந்த நிலத்தை திரும்பப் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடனே வழங்கப்பட்டது.

“According to the 2nd defendant (Rt. Rev. C. Selvamony M.A., B.D., Bishop, K.K. Diocese) the suit survey number originally belonged to Karukkuvilai veedu and it was on an achadi oolai 11-4-1040 M.E. in favour of the 2nd defendant and as per stipulations therein it was irredeemable and was never redeemed.”

நல்உள்ளம் கொண்ட கருக்குவிளை குடும்பத்தைச் சார்ந்த தலைவரிடம் நிலத்தை பெற்றுக்கொண்ட இரு சபையாரும் 1864ஆம் ஆண்டு ஒரே திருச்சபையாக இணைந்தனர். தேவிகோட்டு திருச்சபையில் அப்போது திருப்பணியாளராக இருந்த திரு. செபாஸ்டியான் இலுப்புவிளாகம் சபையின் ஊழியராகவும் செயல்பட்டார்.

இணைப்பின் முதற்கட்டமாக இலுப்புவிளாகத்தில் இருந்த ஆலயம் மாற்றப்பட்ட விவரத்தை Rev. பேலீஸ் ஐயர் 1864ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடுகிறார்:

“But one congregation, Illuppuvilagam, has been united with that of Kadamankuzhi, the prayer house at the latter place having been taken down and erected at a place about central for both congregations.”

இலுப்புவிளாகம் சபை கடமாங்குழி சபையுடன் இணைக்கப்பட்டு, கடமாங்குழியில் இருந்த ஜெப ஆலயமும் எடுக்கப்பட்டு இரண்டு சபைகளுக்கும் மத்தியமான இடத்தில் கொண்டு வரப்பட்டது.

Rev. பேலீஸ் ஐயர் தனது 1865ஆம் ஆண்டு அறிக்கையில் மீண்டும் குறிப்பிடும்போது:

“The chapel at Kadamankuzhi has been taken down and rebuilt at a place central to two congregations which were united in 1864.”

எளிமையாக தொடங்கப்பட்ட திருப்பணி பக்கத்து கிராமங்களுக்கு இயேசுவின் புகழைப் பரப்பத் தொடங்கியது. இச்சபையின் முதல் திருப்பணியாளராக இருந்த பாரக்காவிளையைச் சேர்ந்த திரு. மாசில்லாமணி அவர்கள் வண்ணான்விளை சபையையும் கவனித்து வந்தார்.

அவர் திருப்பணி ஆற்றியபோது 1867ஆம் ஆண்டு 111 பெரியோர்களும், 1869ஆம் ஆண்டு 99 பெரியோர்களும் 58 குழந்தைகளும் திருச்சபையார் அங்கங்களாக இருந்தனர்.

1869ஆம் ஆண்டு திருப்பணியாளர் காலரா நோயினால் பாதிக்கப்பட்டு காலமான செய்தியை Rev. பேலீஸ் ஐயர் குறிப்பிடும்போது:

“Five of the catechists were carried off by cholera... Two of the others, Masillamani of Parakanvilai and Paramanandam of Kanjikulhi had been long and usefully employed in the mission. Masillamani had always maintained a consistent character and worked earnestly and successfully during more than 16 years that I had known him. He was thought skillful as a native doctor, and this often helped him in his work. One morning (October 20th) he had been going out among the sick of his congregation and was himself taken with symptoms of the disease. He was able to walk to his house, about a mile off, but died that night.”

ஐந்து சுவிசேஷகர்கள் காலராவினால் மரித்தார்கள். மற்ற இருவரில் பாரக்கன்விளையைச் சேர்ந்த மாசில்லாமணியும் கஞ்சிக்குழியைச் சேர்ந்த பரமானந்தனும் பல ஆண்டுகள் மிஷனறி திருப்பணியாற்றியவர்கள். மாசில்லாமணி கடந்த 16 ஆண்டுகளாக நற்குணத்தோடும் வெற்றிகரமாகவும் பணியாற்றியவர். அவர் நாட்டு மருத்துவராகவும் இருந்தபடியால் அது அவருடைய பணிக்கு உதவியாக இருந்தது.

அக்டோபர் 20ஆம் தேதி காலை சுகவீனமாக இருந்த தனது சபை மக்களைச் சந்தித்து வந்தபின் நோயின் அறிகுறி தென்பட்டது. சுமார் ஒரு மைல் தூரத்தில் இருந்த தனது வீட்டிற்கு நடந்து வந்த அவர் அந்த இரவே மரித்தார்.

அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பல திருப்பணியாளர்கள் வந்தனர். கடமாங்குழியில் சபை வளருவதற்கு பாடுபட்டவர்களில் கடமாங்குழியைச் சேர்ந்த திரு. சந்திரன் ஆசான் குறிப்பிடத்தக்கவர். திருப்பணியாளருடன் இணைந்து திருச்சபை வளர உதவியாக இருந்தார். அவரின் பின் சந்ததியினரும் சபை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

சந்திரன் ஆசான் பரம்பரையில் இறையியல் வல்லுநர் Rev. Dr. J. ரசெல் சந்திரன் குறிப்பிடத்தக்கவர்.

மூப்பர்கள் ஏற்படுத்துதல்

ஆரம்பகால திருச்சபைகளில் மூப்பர்கள் திருப்பணியாளரால் விசுவாசிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டு அமர்த்தப்பட்டனர். இப்பழக்கம் Rev. பேலீஸ் ஐயர் காலத்தில் 1867ஆம் ஆண்டு தொடங்கியது.

அதேபோன்று, சபைகளில் போதகன்மாருக்கும் உபதேசிமாருக்கும் லௌகீக விஷயங்களில் உதவி புரியவும், சபையின் சீருக்கும் ஜனத்தொகை வளர்ச்சிக்கும் தக்கதாய் 2, 3, 4 டீக்கன்மார்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். சபையாக தங்கள் காரியாதிகளை தாங்களே நடத்திக்கொள்ள இவ்வேற்பாடு உதவியாக இருந்தது.

அதுகுறித்து அவர்கள் இன்னும் குழந்தைகள் போன்ற நிலையில் உள்ளனர் என்று பேலீஸ் ஐயர் தமது 1867ஆம் ஆண்டு அறிக்கையில் எழுதியுள்ளார்.¹⁵

Rev. ஐசக் ஹாரிசன் ஹாக்கர்

1877ஆம் ஆண்டு Rev. பேலீஸ் ஐயர் மரணமடைந்த பின்னர், 1878 முதல் Rev. ஐசக் ஹாரிசன் ஹாக்கர் ஐயர் நெய்யூர் சேகரத்தின் பொறுப்பை ஏற்றார். அக்காலத்தில் இவ்விடத்தில் இருந்த நமது முதலாவது ஓலைச்செட் ஆலயத்தை பழுது நீக்கி விச்தாரமாக கட்டினார்கள்.

அதுமட்டுமல்லாமல், ஆலயத்திற்கு என்று பெற்ற பூமியை பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்தினார்கள். அவர்கள் அக்கறை செலுத்திய உண்மையை 1905ஆம் ஆண்டு தனநிச்சய வழக்கில் (Settlement Case) அனுபவக்காரன் பகுதியில் ஹாக்கர் ஐயர் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் அறிய முடிகிறது.

இச்சபையின் பால் கண் மற்றும் கருத்துடன் இருந்து கவனித்து கொண்டமைக்கு ஆதாரமாக:

“At that time Church was in possession of this survey number. In col. (3) in Ex. B2 there is a reference to a European missionary by name Hawker Sahib.”

என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேவிகோட்டு சர்கிளின் கீழ் கடமாங்குழி சபை

நெய்யூர் சேகரம் வேகமாக வளர்ச்சி பெற்றதால், Rev. ஹாக்கர் ஐயர் 1895ஆம் ஆண்டு நெய்யூர் சேகரத்தை சில சர்கிளாகப் பிரித்தார். அதின் அடிப்படையில், 1879ஆம் ஆண்டு பாஸ்டரேட் அந்தஸ்தைப் பெற்ற தேவிகோடு சபை, சர்க்கிள் அந்தஸ்து பெற்றது.

கடமாங்குழி சபை தேவிகோடு சபைக்கு அருகாமையில் இருந்தாலும், தேவிகோடு சபையின் உபசபையான இலுப்புவிளாகம் சபை 1864ஆம் ஆண்டு கடமாங்குழியோடு இணைந்த படியாலும், தேவிகோடு சர்க்கிளின் கீழ் கிளை சபையாக இச்சபை பாஸ்டரேட் அந்தஸ்து பெறுவது வரை (1970) இயங்கியது.

சபை வளர்ச்சி

இயேசுவாகிய ஒளி ஆலயம் வழியாக இவ்விடத்தில் ஏற்றப்பட்ட பிற்பாடு, பக்கத்து கிராமங்களான குற்றிதாணி, கொடுக்கன்விளை, பாலக்கோட்டை, காஞ்சான்விளை, வரவிளை, ஈச்சன்விளை, மிடாலக்காடு, நீர்வகுழி, கட்டப்புளி, புதுக்காடுவெட்டிவிளை, முகிலவிளை, பருத்திவிளை, பிறவாவிளை, கல்வெட்டான்குழி, பள்ளாத்துவிளை, கடமாங்குழி முதலிய பகுதிகளில் வசித்துவந்த இதர மார்க்கத்து மக்கள் கிறிஸ்துவின் ஒளியினிடம் வழி நடத்தப்பட்டனர்.

காலரா, பஞ்சம் போன்றவைகள் சபை மக்களை வெகுவாக பாதித்தபோதிலும், அவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருந்து சபை வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.

1895ஆம் ஆண்டு அறிக்கை படி, சபையில் 50 குடும்பங்கள், 16 திருச்சபையாரும், 71 ஞானஸ்நானம் பெற்றவரும், 96 ஏனையோர் — மொத்தம் 183 பேர் அங்கமாக இருந்தனர். இவர்களில் 60 பேர் படிக்கத் தெரிந்தவர்கள், வருட வருமானம் 57 ரூ 11 அணா 2 பைசா ஆகும்.

தற்போதைய ஆலயத்திற்கு முந்திய ஆலயம்

இப்பிராந்தியத்தின் ஏழை மக்கள் தங்கள் ஆலயத்தை ஓலை கூரையாகவே அமைத்து வைத்திருந்தனர். அதை குறித்து 03-02-1935 அன்று திருப்பணியாளர் வில்லியம் தலைமையில் கூடிய சபைக்குழு, கடமாங்குழி ஆலயத்தின் மேல் கூரை ஆள் ஏறி இருந்து ஓலை கட்ட அபாயகரமான நிலையில் இருப்பதால் அதைப் பழுதுபார்த்து கட்டவேண்டும் என்று ஆலோசனை செய்தது.

ஆனால் 19-05-1935 அன்று திருப்பணியாளர் திரு. வில்லியம் தலைமையில் கூடிய சபைக்குழு, ஆலயத்தின் மேல் கூரையை மாற்றம்செய்வதை விட, ஆராதனைக்குவசதியான இடமில்லாததாலே, கோவில்கட்டிடத்தைப் பெரிதாக்கி புதிதாக கட்டும் வழியில் சேகரத்துப் போதகரை அறிவித்து, தாமசியமின்றி வேலை ஆரம்பிக்க வேண்டும் என ஆலோசனை செய்தது.

பொருளாதாரம் மிகவும்பின்தங்கிய நிலையிலும், திருப்பணியாளர் தங்குவதற்குமான இடம் மிஷன்வீடுகட்டப்பட்டிருந்தபடியும், ஆலயவேலை தொடங்க கால தாமதம் ஏற்பட்டது.

1942ஆம் ஆண்டு திரு. J. பேரின்பநாயகம் உபதேசியாராக பணித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆலயவேலைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 12-11-1942 அன்று குளச்சல் கீழ்கரைதேசம், பூமாத்திவிளை, புத்தன் வீடு ஆகிய நிலங்கள் திரு. சாமுவேல் தங்கமணிக்குக் கொடுக்கப்பட்டு கட்டிடப்பணிக்கான அஸ்திபார வேலைகள் முடிக்கப்பட்டன.

இந்நிலையில் திருப்பணியாற்றிய திரு. J. பேரின்பநாயகம் ஸ்விசேகர மாற்றப்பட்டு, Rev. P.J. சார்லஸ் பொறுப்பேற்றார். அவர்களின் பணிக்காலத்தில் 22-02-1944 அன்று சேகரத்துப் போதகர் அருள்திரு. J.A. ஜேக்கப் ஐயர் ஆலயத்திற்கான பெயரை கல்வையாக வழங்கினர். அன்றைய தினம் 40 பேருக்கு ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டு இறை நாமத்தை மகிமைப்படுத்தினர்.

ஆலயவேலை தொடர்ந்துநடைபெறும் காலத்தில் மிஷன்வீட்டிலும் சில அத்தியாவசிய வேலைகளை செய்து, அந்த கட்டிடத்தையும்புதுப்பித்தனர்.

திரு. J. பேரின்பநாயகம் 01-05-1949 அன்று திரும்பவும் திருப்பணியாளராக நியமிக்கப்பட்டார். 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரங்கள் வாங்கத் தீர்மானிக்கப்பட்டது; அதற்கான செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்.

ஆலயவேலைக்குப் பணம் தடையாக இருந்தபடியால், 16-12-1951 அன்று கூடிய சபைக்குழு “கடமாங்குழி புதிய ஆலயத்தை உடனே முடிக்கவேண்டும்; அதற்காக தற்கால பணம் இல்லாததால், பொதுசபையாருடைய சம்மதப்படி ரூ. 50 முதலொருதொகை கடனாக எடுத்துக் கட்டிடவேலை உடனடியாக முடிக்க வேண்டும்; ஆலயவேலை முடிந்தபிறகு, சபையில்செலவுப் போகமீதியாக வருமானத்தை திரும்பப்பார்க்காமல் வாங்கிக் கொள்ளவேண்டும்” எனத் தீர்மானித்தது.

1952ஆம் ஆண்டு நவம்பர் 9ல் கூடிய சபைக்குழு புதிய ஆலயத்திலுள்ள குறைந்த வேலைகளைச் செய்து முடித்தது. கிறிஸ்மஸ் பண்டிகைக்குமுன்பாக பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும், ஒழுங்குகள் செய்து சேகரத்துப் போதகருக்குப் விண்ணப்பம் கொடுத்தது.

ஆலயவேலைகள் முடிவுற்ற நிலையில், ஆலயத்தை பிரதிஷ்டை செய்வதெனச் சபைக்குழு முடிவு செய்தது. மேலதிகாரிகளின் வசதிப்படியும், கர்த்தரின் சித்தப்படி, ஆண்டவரின் மகிமை வெளிக்காண்பிக்கும் வகையில், 1953ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வியாழக்கிழமை பஜனைப் பட்டாபிஷேக ஆராதனையோடு “நம்முடைய தாழ்வில்நம்மை நினைத்தவரை துதியுங்கள்” என்ற வசனத்தை ஆலய சுவரில் மிளிரப்பேராயர் Rt. Rev. லெக் அவர்கள் எழுதியும், “30 × 60” அளவுள்ள ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அன்றைய நிகழ்ச்சியில் திரு. J. பேரின்பநாயகம் சுவிசேசகர், Rev. ராசைய்யா (தேவிகோடு சர்க்கிள் செயர்மேன்), Rev. J.E. கேசரி (தென்சேகரத்துப் போதகர்) ஆகியோர் மற்றும் சபை மக்கள் பெருந்திரளாக கலந்து ஆண்டவரை மகிமைப்படுத்தினர். அன்றுசிறுமிகள் பாடிய சிறப்புப் பாடலின் வழியாக நிகழ்வுகள் தெரிகிறது:

“சுந்தர பரமதேவா சொபித கிறிஸ்தே சொவேசோபன் அருள் வீசிடவே வந்தருள் வீரே தன்னலம் ஏ உன்னிடாதது, எங்குப் புகழ் பேலீஸ் ஐயர் உன்னதனார் உயர் சபை ஊன்றுவித்தார். பேரின்பநாயகன் பேர ஒளியை விசிடவே, பேரின்பநாயகம் தின பேருழைப்பால் பாரில் நல்ல ஆலயம் ஆய்பார்த்திபனார். சீரியர் ஜேக்கப் ஐயர் கல்லும் ஏற்றினார். பாரில் இன்பம் விட்டும் மக்கள்பரலோக பேரின்பமே பெற்றது. இஸ்ரவேல், டேவிட் போற்றிட சார்லஸ் மறைச் சாரும், பேரின்பத்தால் முற்றிடமுற்றிட கூறுகோயில் பணிவேலை குறைவின்றி நிறைவேறியது. நூறுபத்தாய்தந்த பக்தர் தேவதாசரு ஊர்ஊராய சென்று வழங்கினார்கள். டீக்கன்மாரும், வாலிபரும் மாறாவாஞ்சை ஜெபம் நிறை, மக்கள்தாயாரும், ஊறும்அன்புள்ளம், நிறைசர்க்கிள் ஐயர் ராஜய்யாவும், எங்கே உள்ள இன்ப ஜோதிஇயேசுநாதர் தங்கும் வீடாய்எங்கள் இதயம் திறந்து இறைஞ்சிட பங்கு பரம்பொருள் நீதிபாக்கியம்சேர்உயர் கதிதங்கும் மோட்ச வீடாய் பிரதிஷ்டை பண்ணவே சங்கையுடன் பிஷப் லெக்கும், மங்கா சிங்கம் கேசரியும் வாழ்கவே, தூய நாமம் வாழ்கவே. தீயோர் மீட்கவே, பாலர் கீதம் பாடியே புகழ்”

Mrs. கமலா ம்ஜாண் ஜோஸ் (குற்றிதாணி) ஆகியோர் ஆதாரம் கொடுத்தனர்.

ஆலயவேலையில் 1957ஆம் ஆண்டு, திசம்பர்மாதம் வரை ஓடுபோடப்பட்டது. 07-11-1965 அன்று திருப்பணியாளர் திரு. அபிஷேகமணி தலைமையில் கூடிய சபைக்குழு, திருமணமான குடும்பத்திற்கு ரூ. 25, 20, 15, 10, 5 என்ற நிரக்கில் வழங்கி, 1966ஆம் ஆண்டில் ஆலயத்தின்வெளிச்சுவர்பூச்சுகளை செய்தும் முடித்தனர். 1968 டிசம்பர் 17-ம் தேதி ஆலயத்திற்கும் மிஷன்வீட்டிற்கும் மின்விளக்குகள் போடப்பட்டன.

சபை பாஸ்டரேட் அந்தஸ்து பெறுதல்

திரு. D. மோசேதாஸ், IL.Th. தலைமையில் 28-09-1969 அன்று கூடிய பொதுசபை கூட்டம், சபை பாஸ்டரேட் அந்தஸ்து பெறத் தீர்மானித்து, 1969 ஆகஸ்டில் முதல் பாஸ்டரேட் சபைக்குரிய மத்திய நிதியை அடைக்கத் தொடங்கியது.

1970ல் பாஸ்டரேட் அந்தஸ்து அடைந்த தொடக்க விழா நிகழ்ச்சிகள் 22-03-1970 அன்று கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பேராயர் Rt. Rev. I.R.H. ஞானதாசன், M.A., B.D. அவர்கள் வருகை புரிந்தார்கள். அவர்களை சுபநாளில் சுகுணதயாளர் என்ற பாடல் பாடி சபையார் வரவேற்றனர்.

அந்த நிகழ்ச்சிக்கு Rev. ஆமோஸ் (சேகரத்துப் போதகர், நெய்யூர்), Rev. R.N. துரைராஜ் (தேவிகோடு போதகர்), Rev. P.J. சார்லஸ், Rev. S.P. வில்சன் மற்றும் Mr. T. அபிஷேகமணி ஆகிய போதகர்கள் கலந்து தேவனை மகிமைப்படுத்தினர். பேராயர் யோவான் 12:13 ஐ மையமாகக் கொண்ட செய்தியை வழங்கினார். 49 குழந்தைகள் ஞானஸ்நானம் பெற்றனர்; 10 பேர் திடப்படுத்தல் பெற்றனர்.

சபை பாஸ்டரேட் அந்தஸ்துக்குப் உயர்த்தப்பட்ட போது திரு. S. தங்கையா (மிடாலக்காடு) முதல்ஆதீன கவுன்சில் உறுப்பினராக சபை சார்பில் அனுப்பப்பட்டார்.

ஆலய இல்லப் பணிகள்

28-05-1939 அன்று திருப்பணியாளர் திரு. J. பேரின்பநாயகம் தலைமையில் கூடிய சபைக்குழு, நமது சபையில் சரியான ஊழியம் நடைபெறவில்லையெனக் கண்டதால், உடனடியாக முயற்சி செய்யும் தீர்மானம் எடுத்தது.

ஆலயவேலை தொடங்க, திருப்பணியாளர் சபையில் தங்கியிருப்பது நல்லது எனக் கண்ட சபைக்குழு 16-02-1941 அன்று மிஷன்வீடு கட்டுவதற்காக திரு. P. மனுவேல் கொத்தனாருக்குச் சதுர அடிக்கு 4 காசு வீதம் ஒப்பந்தம் பேசிக் கொடுத்தார். அவர் உடனடியாக வேலை தொடங்கினார். இவ்வேலை 1942ஆம் ஆண்டு ஆரம்பத்திலே முடிக்கப் பெற்றது.

திரு. J. பேரின்பநாயகம் சுவிசேஷகர், சபை இல்லத்தில் தங்கிய முதல் திருப்பணியாளர் ஆவர்; முதல் மிஷன்வீடு பழுதுபட்டதால், 1958ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருப்பணியாளர் திரு. ஜோண்ஸ் ராஜ் தலைமையில் கூடிய சபைக்குழு புதிய மிஷன்வீடு கட்ட உடனடியாகச் செயல்பட தீர்மானித்தது. இரண்டாம் மிஷன்வீடு கட்டும் பணிக்குத் திட்டமிடப்பட்டு முடிக்கப்பட்டது.

இரண்டாவது மிஷன்வீட்டிலும் திரு. J. பேரின்பநாயகம் முதலாவது தங்கிய திருப்பணியையைத் தொடர்ந்து பணியாற்றினார். இரண்டாவது வீடு பழுதுபடவே காங்கிரீட் வீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதால், 25-05-1997 அன்று Rev. M. மோசஸ் சாம்ராஜ் தலைமையில் கூடிய பொதுக்குழு 850 சதுர அடியில் ஒரு மிஷன்வீடு கட்டவும், அதற்கான நிதியை ஆலய விரிவாக்க நிதியிலிருந்து எடுக்கக் கூடாது என்று 22-05-1997 அன்று தீர்மானித்தது.

26-06-1997 அன்று அடிக்கல் போடப்பட்டு கட்டுமான பணிகள் முடிந்து, 26-09-1999 அன்று பேராயர் Rt. Rev. M.I. கேசரி, M.A., B.D., S.T.M. அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின் Rev. M. மோசஸ் சாம்ராஜ் அதில் முதலாவது குடும்பமாக தங்கி பணியாற்றினர்.

ஆயர் இல்லத்திற்கு 22-03-2002 அன்று தனி மின் இணைப்பு வழங்கப்பட்டது. 04-07-2003 அன்று தொலைபேசி இணைப்பு கிடைத்தது.

திரு. J. பேரின்பநாயகம்

இச்சபையில் 13 ஆண்டுகள் மூன்று தடவைகளாக பணியாற்றிய திரு. J. பேரின்பநாயகம், உபதேசியர் அவர்களாகச் செயல்பட்டார். கர்த்தருக்குள் நித்திரை அடைந்த போது சபை சார்பில் அப்போதைய செயலர் திரு. C. டைட்டஸ், B.Com., B.L. அவர்கள் 1997 ஜூலை தேசோபகாரில் அவருக்குஅஞ்சலி செலுத்தும் வகையில் எழுதியுள்ளார்:

“நேர்மையாக நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்துத் தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்” (ஏசா. 57:2)

மதிப்பிற்குரிய திரு. J. பேரின்பநாயகம், அவர்களின் வாழ்க்கையில் நல்ல ஓட்டத்தை ஓடிமுடித்தார். 84வது வயதில், 1997 மார்ச் 31 அன்று இரவு 11 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். வாழ்ந்தவர்களோடு மறைந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும், பேரப்பிள்ளைகளும் மற்றும் உறவினருக்கும் சபை சார்பில் ஆறுதல் வழங்கப்பட்டுள்ளது.

திரு. J. பேரின்பநாயகம் உபதேசியார், கடமாங்குழி சபையில் மூன்று தடவைகளும் சிறந்த பணியாற்றியவர். அவர்களது பணிக்காலத்தில் தற்போது காணப்படும் மிஷன்வீடு மற்றும் அழகான ஆலயம் கட்டப்பட்டது. முதலாவது தடவை பணியாற்றியபோது துவங்கிய ஆலயம் மூன்றாவது தடவை முடிந்தது.

அவர்களது ஊழியம் மற்றும் சபை மக்களுடன் சேர்ந்த பணிகளைப் பற்றி வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை.

வளர்ச்சிப்பணிகள்

1964 ஜூன் 12 -ல் திரு. N. அபிஷேகமணி தலைமையில் கூடிய சபைக்குழு வாரந்தோறும் புதன்கிழமை கூட்டம் மணியடித்து சாயங்காலம் நடத்த தீர்மானித்து செயல்படுத்தியது.

1964 செப்டம்பர் 27 -ல் கூடிய திருச்சபையார் பொதுக்கூட்டம் பிடியரிசி காணிக்கையை அமுல்படுத்தியது. 1965 முதல் ஞாயிறு பள்ளி தொடங்கப்பட்டது.

1.11.1965 -ல் கூடிய சபைக்குழு, மின் இணைப்பை ஆலயத்திற்கு எடுக்க தீர்மானித்து, 1968 டிசம்பர் 17 -ம் நாள் மின் இணைப்பு ஏற்றப்பட்டது. ஆலய காம்பவுண்ட் சுவர் முன்பக்கம் 1970ல் கட்டப்பட்டது. இதற்காக ஆலயத்திற்கு சொந்தமான 4 சென்ட்ஸ் நிலம் ஆதீன அனுமதி பெற்றது.

Minutes of the Properties Board held on 21st October 1967; 8013 Kadamankuzhi land. Resolved to sell the 4 cents in survey number 2085 pattah 707. The sale proceeds will be utilised for the construction of the Church Compound wall.

6.2.1972 திருப்பணியாளர் திரு. S. ஐசக் தலைமையில் கூடிய சபைக்குழு இந்து கிராம ஊழியம், மாட்ன்விளையிலுள்ள ஊழியத்தை மத்திகோடு சபையின் விருப்பத்திற்கிணங்கி நாம் ஏற்றெடுக்கும் படி தீர்மானித்தது.

27.1.1974 -ல் கூடிய சபைக்குழு மற்றும் 31.3.1974 -ல் கூடிய பொதுச்சபையார் கூட்டம் Rev. தேவசிகாமணி போதகர் தலைமையில் கூடி ஆலயத்திற்கு ஒலிபெருக்கி வைக்க தீர்மானித்தனர். 1974 -ம் ஆண்டு ஒலிபெருக்கி அமைக்கப்பட்டது.

1978 -ம்ஆண்டிலிருந்து வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. 3.12.1978 -ல் Rev. S. ஜாண்சகாயம் அவர்கள் பணிக்காலத்தில் ஆலய காம்பவுண்ட் கேட் ஒன்றுப்போடப்பட்டது.

கிணறு

Rev. V. டேவிட் பணிகாலத்தில் 1.6.1986 -ல் கூடிய சபைக்குழு கிணறு வெட்ட தீர்மானித்து, 9.8.1987 அன்று Rev. D. ரெத்தினராஜ் (மத்திகோடு சேகரத்துப் போதகர்) அவர்களால் இறைநாம மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

சபையாரிடம் சிறப்பு காணிக்கை பிரிந்து 1.10.2000 அன்று அக்கிணற்றில் பம்பு செட் அமைக்கப்பட்டு, Rev. J. ஜஸ்டின் தேவதாஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

வேதாகம தாய்மார்கள்

27.2.1983 -ல் கூடிய பொதுச்சபை கூட்டம் சபை பணிகளை விரிவாக்கம் செய்ய வேதாகம தாய்மார்கள் நியமிக்க தீர்மானம் செய்தது. 1.2.1988 -ல் திருமதி. தாசம்மாள் தங்கையா (வரவிளை) மற்றும் திருமதி. ஜெயின்பாய் நேசமணி (மிடாலக்காடு) நியமிக்கப்பட்டனர். 21.11.2002 -ல் திருமதி. மேரி ஜேன் கனகராஜ் (குற்றிதாணி) நியமிக்கப்பட்டார்.

திருமதி. மேரி ஜேன் அரசு வேலை காரணமாக 08.02.2005 -ல் ராஜினாமா செய்ததால் 01.03.2005 முதல் திருமதி. ஐறிஸ் பத்மா டேனியல் வேதாகம தாயாக நியமிக்கப்பட்டார். 10.10.2010 முதல் திருமதி. மேழ்சிதங்கராணி வேதாகமத் தாயாக நியமிக்கப்பட்டார்.

நூலகம்

15.5.1988 -ல் Rev. V. டேவிட், M.A., B.D. தலைமையில் கூடிய சபைக்குழு நூலகம் அமைக்க ஒழுங்குசெய்து, 31.7.1988 அன்று திரு. K. சுந்தர்ராஜ் (செயலர் C.C.C.R.) தொடங்கி வைக்கினார். முதல் தொடர்பாளராக திரு. C. ஆலிவர் செயல்பட்டார்.

ஏழைகள் வீடுகட்டும் திட்டம்

மத்திகோடு சேகர அளவில் பெற்ற உதவியின் அடிப்படையில் கட்டப்பட்ட கடமாங்குழி திரு. ஜாண்றோஸ் வீடு 28.5.1988 அன்று Rev. D. ரெத்தினராஜ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

28.8.1994 -ல் சபை பெயரில் குற்றிதாணியில் பூமி வாங்கி அதில் ஒரு வீடு கட்டி திருமதி. T. சுந்தரபாய் (குற்றிதாணி) தங்க வைக்கப்பட்டார்.

8.10.2000 -ல் சேமிப்பு கணக்கு மிடாலக்காடு கூட்டுறவு வங்கியில் தொடங்கப்பட்டது. திரு. மணி (ஆலுவிளை) அவர்களின் புதிய வீட்டிற்கும் 2001 பிப்ரவரி மாதம் வரவிளை திரு. K. சுந்தர்ராஜ் அவர்கள் வீட்டிற்கும் அஸ்பெஸ்டாஸ்கூரைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

31.12.2008 -ல் கடமாங்குழி பகுதிக்கு சார்ந்த திரு. N. தங்கராஜ் அவர்களுக்கு பேராய எளியோர் நல்வாழ்வு திட்டத்தின் சார்பிலும், சபை மக்களின் நன்கொடை மூலமும் வீடு கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சந்திரன் ஆசான் நினைவு சமூகநலக்கூடம்

1.1.1989 அன்று Rev. V. டேவிட் அவர்கள் தலைமையில் கூடிய சபைக்குழு Dr. Rev. றசல் சந்திரன் (முதல்வர், UTC பங்களூர்) அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் தாத்தா (great grandfather) Mr. சந்திரன் அவர்களின் நினைவாக மண்டபம் கட்ட தீர்மானித்தது.

29.1.1989 அன்று Rev. D. ரெத்தினராஜ், M.A., B.D. (சேகர போதகர், மத்திகோடு) அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.

29.4.1990 அன்று பேராயர் Rt. Rev. G. கிறிஸ்துதாஸ், M.A., B.D. அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் Rev. Dr. றசல் சந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு சமையல் அறை கட்டப்பட்டது. 19.11.2000 அன்று முதலாவதாக சமையல் பாத்திரங்கள் வாங்கப்பட்டன.

ஜெனரேட்டர்

Rev. V. டேவிட் குணமணி அவர்கள் காலத்தில் 1995 பெப்ரவரி மாதத்தில் 5 KVA திறன் கொண்ட ஜெனரேட்டர் வாங்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

புதிய ஜெனரேட்டருக்காக தனி அறை கட்டப்பட்டு 4.3.2003 அன்று Rev. J. ஜஸ்டின் தேவதாஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நிழல்கூடம்

திருமதி. பால்சிங் அவர்கள் தந்த நிலத்தில், கருங்கல்–குறும்பனை ரோட்டில் ஆலயத்திற்குத் திரும்பும் வழியில் அமைக்கப்பட்ட நிழல்கூடம் 8.8.1989 அன்று Rev. V. டேவிட் அவர்கள் தலைமையில், சேகர போதகர் Rev. D. ரெத்தினராஜ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பெண்கள் தையல் பயிற்சி பள்ளி

Y.M.C.A. மூலம் நடைபெற்றுவந்த தையல் பயிற்சி, 20.8.2001 முதல் ஆதீன பெண்கள் சங்கம் மூலம் நடத்தப்பட்டது. திருமதி. மெர்லின் கிரிஸ்டபெல் சத்தியதாஸ் (குற்றிதாணி) ஆசிரியையாக பணியமர்த்தப்பட்டார்.

போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் 2004 ஆம் ஆண்டு இறுதியில் இப்பள்ளி நிறுத்தப்பட்டது.

உபவாச ஜெபக்குழு

மாதத்திற்கு ஒருமுறை நடைபெற்றுவந்த உபவாச ஜெபக்குழு 3.6.2000 முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டது.

சபை மக்களிடையே ஜெப ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில் 24.10.2002 அன்று கடமாங்குழி மற்றும் தெற்கு புதுக்காடு வெட்டி ஆகிய இடங்களில், 25.10.2002 அன்று குற்றிதாணியில், 26.10.2002 அன்று பருத்திவிளையில், 28.10.2002 அன்று மிடாலக்காடு மற்றும் கொடுக்கன்விளை ஆகிய கிராமங்களில் ஜெபக்குழுக்கள் தொடங்கப்பட்டன.

ஆண்கள் சங்கம்

11.1.2004 அன்று மாலை 7 மணிக்கு ஆண்கள் சங்கம் தொடங்கப்பட்டது.

சேகர மாற்றங்கள்

தொடக்க காலம் முதல் தேவிகோட்டு சபை மற்றும் சர்க்கிள் தேவிகோட்டு பாஸ்டரேட்டின் கீழ் இயங்கிவந்த கடமாங்குழி சபை, 1970 ஆம் ஆண்டு பாஸ்டரேட் அந்தஸ்து பெற்ற பிறகு நெய்யூர் சேகரத்தின் கீழ் இயங்கியது.

1979 நவம்பரில் கருங்கல் சபை சேகர சபையாக மாற்றப்பட்டபோது, கருங்கல் சேகரத்தின் கீழ் பாஸ்டரேட் சபையாக இயங்கியது. பின்னர் மத்திகோடு சபை சேகரமாக உயர்த்தப்பட்டபோது 17.11.1981 அன்று மத்திகோடு சேகரத்தின் கீழ் பேராயத்தால் பாஸ்டரேட் சபையாக இணைக்கப்பட்டது.

இதுபற்றி 10.01.1982 அன்று மத்திகோடு சேகரத்தோடு நமது சபை இணைக்கப்பட்டுள்ளதாக வந்த கடிதம் கமிட்டியில் வாசிக்கப்பட்டது. பல வசதியின்மைகள் காரணமாக மறுபரிசீலனை செய்து மீண்டும் கருங்கல் சேகரத்தோடு இணைக்க மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

பேராயம் மத்திகோடு சேகரத்தின் கீழ் இருக்கச் சபையை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், சபை பரிபாலனக்குழு செயலர் 18.09.1982 அன்று அனுப்பிய கடிதம் வரவேற்கப்பட்டு, மத்திகோடு சேகரத்தின் கீழ் சபை தொடர்ந்து இயங்கியது.

வண்ணான்விளை (Old) மற்றும் மோசஸ்புரம் ஆகிய சபைகள் இதன் கிளை சபைகளாக செயல்பட்டன. 01.03.2003 அன்று மோசஸ்புரம் சபை மத்தியோடு சபையின் கீழ் கிளை சபையாக சேர்க்கப்பட்டது.

23.03.2003 அன்று கூடிய சபைக்குழு தேவிகோடு சேகர சபையின் கீழ் இயங்க விருப்பம் தெரிவித்த தீர்மானத்தை பேராயத்திற்குச் சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து 15.02.2003 முதல் தேவிகோடு சேகரத்தின் கீழ் பாஸ்டரேட் சபையாக இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

கோயில்பிள்ளைகள்
  1. திரு. வேதக்கண் – புதுக்காடு வெட்டிவிளை
  2. திரு. செல்வமணி – தெற்கு புதுக்காடு வெட்டிவிளையைச் சார்ந்தவர். மாற்று மதத்தவர்களை கிறிஸ்துவண்டை கொண்டு வந்த வல்லமையான சாட்சியாக விளங்கினார். இவர்மூலம் பலர் கிறிஸ்துவை அறிந்தனர். 14.01.1997 அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்.
  3. திருமதி. கனகம் செல்வமணி – புதுக்காடு வெட்டிவிளை
  4. திரு. மோசஸ் – தேவிகோடு
  5. திரு. சுந்தர் – புதுக்காடு வெட்டிவிளை
  6. திரு. நெல்சன் – புதுக்காடு வெட்டிவிளை
  7. திரு. ஜார்ஜ் – காட்டாத்துறை
  8. திரு. C. ஜெயதாஸ் – புளியறவிளை (தற்போது செயல்பட்டு வருகிறார்)
ஏழைகள் நலத்திட்டங்கள்

ஏழை மாணவர் கல்வி உதவி திட்டம், ஏழைகள் நலத்திட்டம், பாடகர் குழு நலத்திட்டம் போன்றவற்றிற்காக மக்கள் வழங்கிய நிரந்தர நிதிகள் வங்கியில் நிரந்தர வைப்பு நிதிகளாக வைக்கப்பட்டுள்ளன.

ஏழை விதவைகள் பென்ஷன் திட்டம்

பெண்கள் சங்கம் மற்றும் உபவாச ஜெபக்குழு மூலம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை விதவைகளுக்கு மாதந்தோறும் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது திருச்சபையின் சார்பில் இத்திட்டத்தின் கீழ் 6 பேர் பயனடைந்து வருகின்றனர்.

ஆலய வளாக வழக்கு

இவ்வாலய வளாகம் நாயர் சமூகத்தைச் சார்ந்த கருக்குவிளை குடும்பத்தாரால் ஆலய கட்டிடம் அமைக்க Rev. பிரடறிக் பேலீஸ் ஐயர் பெயருக்கும் மிஷனுக்கும் 11.04.1040 M.E. (1964) அன்று ஒற்றியாக வழங்கப்பட்டது. இந்நிலத்தை வழங்கிய குடும்பத்தினர் நல்ல எண்ணத்துடன் வழங்கியதால் பல ஆண்டுகளாக திரும்பப் பெற முயற்சி செய்யவில்லை.

ஆனால் 1976 ஆம் ஆண்டு மேற்கண்ட குடும்பத்தைச் சார்ந்த திரு. C.K. நாராயணபிள்ளை (S/o. Mr. ஐயப்பன் தம்பி, தலக்கோட்டுகோணம், திப்பிரமலை தேசம்) அவர்கள், தனது மனைவி வழியாக (அம்முகுட்டி அம்மா என்ற செண்பகக்குட்டி) தனக்கு 1/3 பங்கு உரிமை உள்ளது என்று பத்மநாபபுரம் முன்சீப் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார் (O.S. No. 251/1976).

அவ்வழக்கில், அங்கு இருந்த பழைய ஆலயமும் மிஷன் வீடுகளும் ஆதாரமாகக் கொண்டு, இவை ஆதீனத்தால் பல ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்திருந்த சொத்துகள் எனக் கருதி, 12.07.1977 அன்று கனம்நீதிபதி அவர்கள் ஆதீனத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து திரு. நாராயணபிள்ளை அவர்கள் மேல்முறையீடு (A.S. No. 147/1977) செய்ததால் வழக்கு தொடர்ந்து நடைப்பெற்று, 26.08.1981 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கீழ்நீதிமன்றத் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்பின் மூலம் ஆலய வளாகத்தின் உரிமை திருச்சபைக்கு உறுதிசெய்யப்பட்டது.

Rev. தேவசிகாமணி அவர்கள் இவ்வழக்கில் சிறப்பு ஆர்வம் காட்டினர். அதோடு குமரி C.S.I. ஆதீனமும் சிறந்த முறையில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வளாகத்தை திருச்சபைக்காக வழங்கிய கருக்குவிளை நாயர் குடும்பத்தினரை நன்றியுடன் நினைவுகூர வேண்டியது மறைக்க முடியாத உண்மையாகும்.

தற்போதைய விரிவாக்கப்பட்ட ஆலயம் கட்டப்பட்ட பின்னணி

முந்தைய ஆலயத்திற்கு கோபுரம் மற்றும் வெஸ்டறி இல்லாதபடியால் இவற்றை கட்ட சபைக்குழுக்கள் முயற்சிகள் மேற்கொண்டன. 27.6.1976 அன்று Rev. N. தேவசிகாமணி அவர்கள் தலைமையில் கூடிய சபைக்குழு மணிமேடை கட்டுவதை, தற்சமயம் பணவசதி குறைவாயிருப்பதினால் சற்று பிந்தி ஆலோசிக்கலாம். என தீர்மானித்தது. தொடர்ந்து 27.11.1977 -ல் Rev. N. தேவசிகாமணி அவர்கள் தலைமையில் கூடிய சபைக்குழு அன்றைய முதலாவது தீர்மானத்தில் திரு. V. சத்தியதாஸ் கம்பவுண்டரின் அபேட்சை கடிதம் 9.11.1977 -ல் வந்த கடிதம் கமிட்டி முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அவர்கள் பொருத்தனையாக செய்ய நினைக்கப்பட்டதான ஆலயத்தின் ஆராதனை மேடையும் அதோடு ஒரு பின்புற அறையும் அமைப்பதற்கு முழு செலவும் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். இதை சபை கமிட்டி நன்றியுடன் ஏற்றுக்கொண்டு இப்பொழுது ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிற இடத்தில் ஆராதனை மேடையும் அதோடு பின்புற அறையும் அமைக்கும்படி சபை கமிட்டியில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. " இந்த தீர்மானம் 19.2.1978 -ல் Rev. N. தேவசிகாமணி அவர்கள் தலைமையில் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் ஆராதனை மேடை கட்டும் விஷயத்தைப் பற்றி பலரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருக்கிறபடியால் ஒரு முடிவுக்கும் வராத நிலையில் தலைவர் ஜெபத்துடன் கூட்டம் கலைந்தது. 25 2.4.78 -ல் ஜெபத்துடன் கூடிய சபைக்குழு மேற்படி வேலைகளை பின்னால் கவனித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தது. Rev. M. ராஜ் அவர்கள் தலைமையில் 1.3.1981 -ல் நடந்த சபைக்குழு ஆல்ட்டர் வெஸ்டறி கட்டுவது இவைகளை எங்கு அமைக்கலாம் என்ற ஆலோசனைக்காக மார்ச் 1 -ம் தேதி காலை ஆராதனைக்குப் பின் திருச்சபையார் பொதுக்கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க தீர்மானித்து பொதுச்சபையை 1.3.1981 -ல் கூட்டியது. இக்கூட்டத்தில் ஆல்ட்டர், வெஸ்டறி கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எந்த இடத்தில் கட்டுவது என்ற கருத்து வேறுபாடு இருந்ததால் ஓட்டுக்கு விடுவோம் என பலர் கூறினபோது வாக்கெடுக்க ஒருசிலர் சம்மதியாதபடியினால் இதைக்குறித்து பின் பரிசீலிக்கலாம் என சபை போதகர் ஜெபித்து ஆசிகூறி கூட்டம் இனிது கலைந்தது. 2 மக்கள் மத்தியில் ஆலயத்தில் கோபுரம் ஆல்ட்டர், வெஸ்டறி போன்றவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து வந்தது. 25.8.1985 -ல் அருள்திரு. V. டேவிட் அவர்கள் தலைமையில் நடந்த சபைக்குழுவில் நமது தேவாலயத்தின் விரிவாக்க பணியும் கோபுரம் கட்டுதலும் தற்பொழுது இருக்கும் நமது தேவாலய கட்டிடத்தின் மேற்குப் பக்கத்தில் விரிவாக்க பணியை மேற்கொண்டு T வடிவத்தில் தேவாலயத்தை விரிவுபடுத்தும் படியாகவும் விரிவாக்கத்தின் வடக்கு பாகத்தில் கிழக்கு மேற்கு பார்வையாக தேவாலய கோபுரம் கட்டி எழுப்பும் படியாகவும் இதுசம்பந்தமாக ஒரு நல்ல பொறியியல் நிபுணரைப் பார்த்து இதற்குரிய வரைபடத்தை (Rough Plan) தயார் செய்து எல்லா ஒழுங்குகளையும் செய்ய வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேற்படி தீர்மானத்தை விவாதிக்க 29-9-1985 அன்று பொது சபை கூட்டப்பட்டது. அதில் சுமார் 400 பெரியவர்கள் கலந்து இருந்தார்கள். போதகர் மாதிரி வரைபடத்தை (extension with tower) சபையில் விளக்கி கூறினார். இதில் ஏழு பேர் மட்டும் எதிர் கருத்துக்களை கூறினார்கள் மற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே ஆலயம் விரிவாக்கும் பணியும் கோபுரம் கட்டும் திட்டமும் இனிது நிறைவேறினது. 28 1128 மேற்படி தீர்மானங்கள் 1-9-1985 ஞாயிறு ஆராதனையில் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து உடனடியாக வேலையை தொடங்க 6-10-1985 -ல் கூடிய சபைக்குழு தீர்மானித்தது. மேற்படி தீர்மானங்களை செயல்படுத்த தடைகோரி O.S.No. 647/1985 நம்பராக பத்மனாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட படியால் தற்காலிகமாக வேலைகள் தொடங்கப்படவில்லை. 6-4-1986 -ல் ஆலோசித்து ஆலய விரிவாக்க சேமிப்பு நிதி தனியாக SBT ஆலஞ்சி கிளையில் தொடங்கப்பட்டது. Rev. Y. டேவிட் குணமணி அவர்கள் ஆலய விஸ்தரிப்பு குறித்து எழுந்த வழக்குகளுக்கு சமரச தீர்வு நீதிமன்றம் மூலமாக 21.1.1992 அன்று தீர்ப்பு பெற்று "ஆலய விஸ்தரிப்பு வேலையை ஆலயத்தின் வடக்குப் பக்கம் பொது சாலை செல்வதால் தென் வடலாக சிலுவை வடிவில் கட்டவும் தெற்கில் வஸ்திராலயம் அமைக்கவும்" சபைக்குழுவில் தீர்மானித்து மேற்படி தீர்மானத்தை குறித்து 22-11-92 -ல் பொது சபை கூட்டி விவாதித்ததில் 44 அங்கத்தினர் கலந்து கொண்ட பொதுசபை, 16-12-90 அன்று சபைக்குழு எடுத்த தீர்மானத்தை ஆமோதித்தது.

வேலையை தொடங்க எண்ணி ஆலய விஸ்தரிப்பிற்கு இடையூறாக நின்ற ஒன்பது பனை மரங்களை பேராய அனுமதி பெற்று மாற்றி 25-4-1993 அன்று பேராயர் உயர்மன்ற திரு. G. கிறிஸ்துதாஸ் M.A., B.D. அவர்களால் அடிக்கல் போடப்பட்டது. 25-5-1997 -ல் Rev. M. மோசஸ் சாம்ராஜ் அவர்கள் தலைமையில் கூடிய சபை பொதுக்குழு "ஆலய விரிவாக்கப் பணி மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்ற பின் தொடங்க தீர்மானித்தது." 30 ஆலயذलंका ानां शुरूं कुलीनं अपी 12-5-1998 (D.DIS 15557/93 dt 12-5-98( கிடைத்தது. அந்த காலகட்டத்தில் தற்போதைய ஆயர் இல்ல பணிகள் நடைபெற்று வந்த படியால் ஆலய வேலை கால தாமதமாகியது. 1-5-2000 அன்று சபை பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் போதகர் Rev. J. ஜஸ்டின்தேவதாஸ் மனதிலும் ஆலய விரிவாக்கம் குறித்த எண்ணத்தினை ஆண்டவர் அருளினார். ஆகவே தனது 2000 2001 வது கிறிஸ்மஸ் புத்தாண்டு செய்தியில் ஆலய விரிவாக்கப் பணியை குறித்து "நமது சபை மக்கள் யாவரும் ஆலயத்திற்கு வரும் பட்சத்தில் ஆலயத்தில் நெருக்கடி காணப்படும். மேலும் ஆலய கட்டிடமும் பழுதுபட்டிருப்பதால் ஆலயத்தை விரிவுப்படுத்திக் கட்ட வேண்டும். அந்த காரியத்தில் வேதத்தின் அடிப்படையில் விடை கண்டு இறை நாமத்தை மகிமைப்படுத்த வாருங்கள்" என அழைப்பு விடுத்தார். 14-1-2001 அன்று அருள்திரு. J. ஜஸ்டின்தேவதாஸ் அவர்கள் தலைமையில் கூடிய சபைக்குழு அன்றைய மூன்றாவது தீர்மானத்தில், "நமது சபை ஆலய கட்டிடத்தை விரிவுப்படுத்துவது சபை மக்களின் நீண்ட கால விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்ற பலமுறை சபை மக்களும், சபைக்குழுவும் போதகர்களும் முயற்சி செய்துள்ளார்கள். 16-12-90 அன்று கூடிய சபைக்குழுவும் ஆலயத்தை வடக்கு நோக்கி அதாவது தென் வடக்காக கட்ட தீர்மானித்தது. 25-5-97 அன்று கூடிய சபை பொதுக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையிலும், அந்த தீர்மானத்திற்கு அரசும் அனுமதி சான்றிதழ் 12-5-1998 அன்று கொடுத்துள்ளது. முந்தைய சபைக்குழுக்கள் மற்றும் பொது சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையிலும் இந்த சபைக்குழு ஆலய கட்டிடத்தை தெற்கு வடக்காக (வடக்கு முகப்பு) வைத்து கட்ட தீர்மானித்தது. இந்த தீர்மானத்தை 21-1-2001 அன்று சபைக்கு அறிவித்து 28-1-2001 அன்று காலை ஆராதனைக்கு பின் சேகரத்து போதகரைக் கொண்டு ஆலய கட்டிட வேலை தொடங்க தீர்மானிக்கப்பட்டது" 32 18-1-2001 -ல் கூடிய சபைக்குழு "ஆலயத்தை வடக்கு முகமாக ரோட்டைப் பார்த்து கட்டவும். வடக்கு காம்பவுண்டு சுவரிலிருந்து 20 அடி விட்டு கட்டிடத்தை அமைக்கவும். ஆலயத்தின் மண்டபம் வடக்கு பக்கம் 10 அடி நீளம், ஆலய உள்பக்கம் 95 அடி நீளம், வெஸ்டறி 10 அடி நீளம் ஆக மொத்தம் ஆலயத்தின் தெற்கு வடக்கான நீளம் 115 அடி அகலம் 50 அடி... இந்த ஆலய விரிவாக்கப் பணி கன்வீனராக திரு. T. ஜஸ்டின் ராபி அவர்களையும் கணக்கராக திரு. D. ராஜமணி அவர்களையும், சபை பொருளாளர் திரு. S.T. வர்க்கீஸ்.. ஆலய விரிவாக்கப் பணிக்கு நன்கொடை ரசீது அடிக்கவும், நன்கொடை பிரிக்கவும் ஆர்வமுள்ள நமது சபை மக்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்படும்... கணக்கு முறையாக தணிக்கை செய்த பின் சபை கமிட்டியின் ஒப்புதல் பெற்ற பிற்பாடு தான் வெளியிடப்படும்" என்று தீர்மானித்து மேற்படி தீர்மானங்களை சபைக்கு வாசித்த பிற்பாடு 28-1-2001 அன்று காலை ஆராதனைக்கு பின் போதகர் Rev. J. ஜஸ்டின்தேவதாஸ் அவர்கள் முன்னிலையில் Rev. M. சாமுவேல்குட்டி (சேகர போதகர், மத்திகோடு) அவர்கள் ஜெபித்து வேலையை தொடங்கி வைத்தார்கள். சபை மக்கள் திரளாக வந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். இவ்வேலையின் பொறியாளராக Er. இயேசுநேசகுமார் (மாங்கரை) அவர்களும் கட்டிட வேலை ஒப்பந்தகாரர்களாக திரு. R. ரெத்தினமணி (கொடுக்கன்விளை, காங்கிரீட் மற்றும் பூச்சு வேலை) திரு. இயேசுதாஸ் (மிடாலக்காடு, கருங்கல் மற்றும் செங்கல் வேலை) திரு. முருகேசன் ஆசாரி (பாலகோட்டை, மர வேலை) திரு. கிறிஸ்டல் ஆன்றனி (உதயா இண்டஸ்ரீஸ், நாகர்கோயில், கூரை வேலை) திரு. Y. ஏங்கல்ஸ் (மிடாலக்காடு, பெயிண்டிங் வேலை) முதலியோர் கூலி ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தனர். கடவுளை நம்பி குறைந்த அளவே நிதியாதாரத்தோடு இப்பணியை ரூ. 25 லட்சம் செலவில் தொடங்க தீர்மானித்த போது இறை மக்கள் தங்களால் இயன்ற காணிக்கையினை கொடுக்கத் தொடங்கினர். குறைந்த நிதியாதாரத்தில் வேலை தொடங்கும் நாளில் கல்வெட்டான் குழி R. செல்வம் அவர்கள் அஸ்திபாரத்திற்கு தேவையான கருங்கல் செலவையும், அஸ்திபாரம் தோண்டுவதற்கான செலவை திருமதி. ஞானசெல்வம் சின்னையன் (புதுகாடுவெட்டி விளை) அவர்களும் முதலாவதாக வந்து ஏற்றுக்கொண்ட சம்பவம் புத்துணர்ச்சி தந்து தொடர்ந்து பல நன்கொடையாளர்கள் எழும்பி கர்த்தரை மகிமைப்படுத்தினர். வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு 22-1-2002 அன்று ஆலயத்தின் அடித்தள அறைகளில் ஒன்றை பேராயர் உயர்மறை திரு. G. தேவகடாட்சம், M.A., B.D., M.Th. அவர்களால் பிரதிஷ்டை செய்ய மற்றொன்றை சேகரத்து போதகர் திரு. M. சாமுவேல்குட்டி, M.A., B.D. அவர்களும் பிரதிஷ்டை செய்தார்கள். சபை போதகர் அருள்திரு. J. ஜஸ்டின்தேவதாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். ஏராளமான சபை மக்கள் ஆண்டவரை மகிமைப்படுத்திய இத்தினத்தில் 70 பேர் திடப்படுத்தல் பெற்றனர். ஒருவர் ஞானஸ்நானம் பெற்றார். ஆலய வேலைகள் கடவுளின் கிருபையால் தொடர்ந்து நடைபெற்ற போது 28-10-2002 அன்று பழைய ஆலய கட்டிடம் மாற்றப்பட்டது. 2-11-2003 -ல் கூடிய சபைக்குழு விரிவுபடுத்திய புதிய ஆலயத்தை 2003 டிசம்பர் மாதம் கர்த்தருடைய நாம மகிமைக்காக அர்ப்பணிக்க எண்ணி பேராயரை அணுகிய போது கர்த்தருடைய சித்தப்படி 31-12-03 அன்று மாலை 5 மணிக்கு பேராயரால் நேரம் கொடுக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்த விரிவாக்கப்பட்ட ஆலயத்தின் 80 சதவிகித வேலைகள் முடிவடைந்து 112 அடி நீளமும், 50 அடி அகலமும், 10x50 அளவு கொண்ட பால்கனி, ஆல்ட்டர் 75 அடி உயரம் கொண்ட மணிக்கோபுரம், 160kg ஆலய மணி ஆகியவை பேராயரால் 31-12-2003 அன்று மாலை 5 மணியளவில் பேராயர் உயர்மறை திரு. G. தேவகடாட்சம் அவர்களால் கர்த்தருடைய நாம மகிமைக்காக பிரதிஷ்டை பண்ணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேவிகோடு சேகர போதகர் அருள்திரு. C. ஜாண் ஹென்றிராஜ், M.A., B.D. அவர்களும் சபை போதகர் அருள்திரு. J. ஐஸ்டின் தேவதாஸ், M.A., B.D., B.G.L. அவர்களும் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியின் ஆதீன தலைவர்கள், சபை மூப்பர்கள், சபை மக்கள், ஏனைய சபை மக்கள் திரளாக வந்து தேவனை மகிமைப்படுத்தினர். போதகர் அருள்திரு. J. ஜஸ்டின்தேவதாஸ் அவர்களை தொடர்ந்து அருள்திரு. J. ஸ்பர்ஜன் இன்பஜெயா 01-05-2005 முதல் பணிப் பொறுப்பேற்றார்கள். 21-08-2005 முதல் ஆலயத்தில் முதல் முறையாக கொண்டு வரும் குழந்தைகளுக்கு வேத வசனம் பதித்த டவ்வல் ஜெபித்து வழங்கப்பட்டு வருகிறது. 11-12-2005 புதிய ஆலயத்தின் மார்பிள் பிரதிஷ்டை சேகரத்து போதகர் அருள்திரு. M. செல்வராஜ் அவர்களால் நிறைவேற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டு முதல் விடுமுறை வேதாகம பள்ளி பிள்ளைகளுக்கு திருச்சபையின் சார்பில் அன்பின் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. வருடம் தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருச்சபை வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி வேத அறிவுப் போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சபை மக்களின் பயன்பாட்டிற்காக புதிய எழுப்புதல் கீதம் அச்சிடப்பட்டது.

ஆலய வளாகத்தில் பழைய போதகர் இல்லத்தில் அரசுச் சார்பில் அங்கன்வாடிமையம் அமைக்கப்பட்டது.

15-10-2006 முதல் கடமாங்குழி பகுதி மக்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக சபைக்குழுவின் வேண்டுகோளை ஏற்று ஆலயத்தின் மேற்பகுதியில் சாலை அமைக்க பேராயரால் அனுமதி வழங்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 15ம் தேதியோடு இணைந்துவருகின்ற ஓய்வு நாளில் குடும்பஞாயிறு தொழுகை அனுசரிக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த நாளில் வயது முதிர்ந்த பெரியவர்கள் திருச்சபை சார்பில் கௌரவிக்கப்பட்டுவருகிறார்கள்.

புதியதாக திருமணம் ஆகி ஆலயத்தில் வருகின்ற புதுமண தம்பதிகளுக்கு திருச்சபை சார்பில் புத்தகம் ஒன்றுபரிசாக வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் ஆலயத்தின் மேற்பக்க மண் அரிப்பை தடுக்கும் விதமாக தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

11-11-2007 முதல் பகல் வேளையில் அனைத்து நாட்களிலும் சபை மக்கள் ஆலயத்தில் வந்து ஜெபித்து செல்வதற்கு வசதியாக காலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஆலயம் திறந்துவைக்கப்பட்டுவருகிறது.

மேலும் மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு உபவாச கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

16-12-2007 முதல் திருச்சபையில் உள்ள ஆதரவற்ற மூதியவர்கள், விதவைகள், கணவரால் கை விடப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டுவருகிறது.

2008 ஆம் ஆண்டில் முதல் வருடம் புனித வெள்ளியன்று ஆலய தொழுகை முடிந்துக ஞ்சி வழங்கப்பட்டுவருகிறது. உயிர்ப்பின் பண்டிகைக்கு மெழுகுவர்த்தி பவனி அதிகாலை நடந்துவருகிறது.

24-08-2008 அன்று கூடிய பொதுச்சபை புதிய சமூக நலக்கூடம் கட்ட தீர்மானித்து, 14-12-2008 அன்று கூடிய பொதுச்சபை கட்டிட வரைபடத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்கினர். திரு. C. போவாஸ் ஆசிரியரை கான்வீனராக கொண்டு கட்டிட குழு தெரிவுசெய்யப்பட்டது. நமது பேராயர் அவர்களால் 31-12-2008 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணி ஆரம்பிக்கப்பட்டது.

கட்டுமான பணிகள் அனைத்தும் கீழ்தளத்தில்மட்டும்கட்ட தீர்மானிக்கப்பட்டது.

2009 ஏப்ரல் மாதம் பாடலாசிரியராக 6 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த திரு. P. ஏசுதாஸ்சாமுவேல், பேரின்பபுரம் அவர்கள் வயது முதிர்ச்சியின் நிமித்தமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு குடும்பஞாயிறு அன்று முதலே ஏழைகளுக்கு சுழற்சி முறையில் ஆடுகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். அன்றுமுதன்முதலாக 12 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போதும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

போதகர் Rev. J. ஸ்பர்ஜன் இன்பஜெயா பணிக்காலத்தில் 124 பேர் திருமுழுக்கு பெற்றுள்ளனர். 71 பேர் திடப்படுத்தல் பெற்றுள்ளனர். இவர் 5 ஆண்டுகள் இறைப்பணியை சிறப்பாக செய்து மாற்றலாக சென்றதை தொடர்ந்து போதகர் அருள்திரு I. பென்சாம் அவர்கள் 01-05-2010 முதல் திருச்சபையில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்தப் பணிக்காலத்தின் ஆரம்பத்தில் ஆலயத்தின் முன்பக்க கதவுகள் கொத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. ஆயர் இல்லத்தில் கழிவறைகள் மற்றும் சமையலறை Tiles ஒட்டி அழகுபடுத்தப்பட்டது.

31-10-2010 அன்று கூடிய பொதுச்சபை போதகரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக நலக்கூட கட்டுமான பணி முன் தீர்மானித்ததின் அடிப்படையில் எல்லா கட்டிடப் பணியும் தரை தளத்தில் அமைந்தால் கார்பார்க்கிங் மற்றும் இதர பணிகளுக்காக தரை பகுதி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றுதெரிவித்த கருத்தை ஏற்று இரண்டு நிலைகளாக மேலும் கீழும் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

07-11-2010 அன்று கூடிய சபைக் குழு புதிய ஆலயத்தில் ஒலி எதிரொலிப்பதால் பேசும் வார்த்தைகள் தெளிவாக கேட்காததாலும், ஆலயத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பக்க சுவர்களின் உயரே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய சிமென்ட் வெண்டிலேசனை மாற்றி பெரிய இரும்பினால் ஆன கிரில் வைக்க தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சந்திரன் ஆசான் நினைவு அரங்கத்தில் மேற்கு பக்கச் சுவர் பூசப்பட்டு வர்ணம் அடிக்கப்பட்டது. மேலும் இவ்வாண்டு முதல் டிசம்பர் விற்பனை விழாவில் பல்வேறு ஸ்டால்கள் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு விற்பனை விழாவில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

S.T. சகோதரர்கள் மூலமாக கட்டப்பட்ட திரு. செல்வமணி நினைவு நற்செய்தி அரங்கம் 31-12-2010 அன்று நமது பேராயர் அவர்கள் மூலமாக அர்ப்பணம் செய்யப்பட்டது. மேலும் ஆலயத்தில் புதிதாக புல்பிட், மேசை, வாசிப்பு மேடை, நாற்காலிகள், சரிவு பெஞ்சுகள், அலங்கார விளக்குகள், ஒலிப்பெருக்கிகள் அனைத்தும் புதிதாக நல உள்ளம் கொண்ட மக்களின் நன்கொடையினால் வாங்கப்பட்டு பேராயர் மூலமாக அர்ப்பணம் செய்யப்பட்டது.

ஆலயம் மற்றும் சமூக நலக்கூடமும் வர்ணம் பூசப்பட்டு அழகு படுத்தப்பட்டது. மாதத்தில் முதல் ஞாயிறு ஆலயத்தில் முன் வந்து அனைவரும் காணிக்கை படைக்கும் வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் திருமண நாளில் ஆலயத்தில் அவர்களது பெயர்களை படித்து ஜெபித்து திருமண வாழ்த்து அட்டை போதகரால் கொடுக்கப்பட்டு வருகிறது.

20-02-2011 அன்று சுய வெறுப்பு உண்டியல் நிரந்தரமாக பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. கோயில் பிள்ளையாக பணியாற்றிய திரு. மோசஸ்வேதாமத்தாய்திருமதி. ஜெயின்பாய் ஆகியோர் வயது முதிர்ச்சியின் நிமித்தமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் இவர்கள் கௌரவிக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல் கிராம ஜெபக் குழுக்கள் நடைபெறும் கிராமத்தில் பொதுவான இடத்தில் வைத்து ஆண்டுவிழா நடத்தவும் ஒழுங்காக வருகிறவர்களுக்கு ஊக்க பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

ஆயர் இல்லத்தின் முன்பகுதியில் பிளாஸ்டிக் கூரை அமைத்து அழகுபடுத்தப்பட்டது. மேலும் மரண வீட்டில் பயன்படுத்தும் ஆறுதலின் கீதங்கள் புதிதாக அச்சிடப்பட்டது. அடிக்கடி ஏற்படும் மின்சார தடைகளை கருத்தில் கொண்டு ஆயர் இல்லத்தில் இன்வெட்டர் அமைக்கப்பட்டது.

2013 ஏப்ரல் மாதம் ஆலய வளாகத்தில் உள்ள கிணறு வறட்சியின் நிமித்தமாக வற்றியதால் புதிதாக ஒரு ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது. ஆயர் இல்லத்திற்கு பாலப்பள்ளம் பேரூராட்சியிலிருந்து தண்ணீர் இணைப்பு கேட்டு பெறப்பட்டது. ஆயர் இல்லத்தின் முன்பக்கத்தில் கான்கிரீட் போடப்பட்டு முன்பக்க மதில் சுவர் நல்ல முறையில் கட்டப்பட்டு 4 சக்கர வாகனம் வந்து செல்லும் விதம் கேட் அமைக்கப்பட்டுள்ளது.

2013 அக்டோபர் நமது திருச்சபையில் பாடலாசிரியராக 40 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த திரு. C. போவாஸ் ஆசிரியர் வயது முதிர்ச்சி மற்றும் சுகவீனத்தின் காரணமாக தன்னுடைய பணியை ராஜினாமா செய்ததால் அவர்களை திருச்சபையின் சார்பில் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் நல உள்ளம் கொண்ட குடும்பத்தார் ஆலயத்திற்கு நவீன Music Keyboard அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

18-08-2014 முதல் பாடலாசிரியராக திரு. L.R. ஐடிலின் பேபிசிங் நியமிக்கப்பட்டு தற்போது பணியாற்றி வருகிறார்கள். கோயில் பிள்ளையாக திரு. ஜார்ஜ், காட்டாத்துறை அவர்களும் ஒலிப்பெருக்கி இயக்குநராக திரு. S. ஸ்டாலின் ஜெனிஷ், ஈச்சன் விளை அவர்களும் வேதாகமத்தாய்மார்களாக, திருமதி. ஐயறி ஸ்பத்மா, திருமதி. மேழ்சிதங்கராணி ஆகியோர்களும் ஆலய துப்புரவு பணியாளர்களாக, திருமதி. ஞானம்மாள் பால்ராஜ், திருமதி. ஜாய்கமலேசன், திருமதி. ஹெலன் மேரி தங்கையன் ஆகியோர்களும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள்.

கடமாங்குழி பகுதியில் இயங்கி வந்த திருச்சபையும், இலுப்பவிளாகம் பகுதியில் இயங்கி வந்த திருச்சபையும் இணைந்து 31-12-2014 அன்று 150 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. மேலும் நமது ஆலயத்தில் சமூக நலக்கூடம் 1 1/4 கோடி ரூபாயில் கட்டப்பட்டு, இந்த நாளில் நமது பேராயர் Rt. Rev. Dr. G. தேவகடாட்சம் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இந்த நாள் முப்பெரும்விழாவாக கொண்டாடப்பட்டது (150-வது நிறைவு விழா, சபை நாள் விழா, சமூக நலக்கூட அர்ப்பண விழா).

போதகர் Rev. பென்சாம் அவர்கள் பணிக்காலத்தில் 87 பேர் ஞானஸ்நானம் பெற்றனர், 87 பேர் திடப்படுத்தல் பெற்றனர். மேலும் உங்கள் கரங்களில் தவழ்கின்ற 150-வது சிறப்பு மலர் வெளியிட இறைவன் அருள்புரிந்தார்.

திருச்சபையின் பழைய வரலாறுகள் முன்னாள் போதகர் Rev. J. ஜஸ்டின்தேவதாஸ் அவர்களால் எழுதப்பட்ட ஆலய அர்ப்பணிப்பு விழா சிறப்பு மலர் (13-12-2003) இருந்து எடுக்கப்பட்டது.